மதராஸப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் லண்டன் நடிகையான எமி ஜாக்சன். தொடர்ந்து விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் 2O படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்தவர் எமி ஜாக்சன். அதனால் பிகினி டிரஸ் உள்ளிட்ட பல கவர்ச்சியான போட்டோக்களை டுவிட்டர், இன்ஸ்டிராகிராம்ப் போன்ற வலைதளங்களில் வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை உசுப்பேற்றி விடுவார்.
சமீபத்தில் வெளிநாடு சென்ற எமி ஜாக்சன், தன் பிறந்த நாளை, நண்பர்களுடன் கொண்டாடினார். அதுதொடர்பான போட்டோக்களை இன்ஸ்டிராகிராமில் வெளியிட்டிருக்கிறார்.
கூடவே பண்ணை வீடு ஒன்றில் படுக்கை அறையில் எடுக்கப்பட்ட, தன் அரை நிர்வாண படத்தையும் வெளியிட்டு, பரபரப்பை உருவாக்கி உள்ளார்.