பிரபல பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் மறைவையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் தமிழ் திரையுலகினர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக பாடகர் திருவுடையான் இன்று நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
கமல்ஹாசன் நடித்த 'விருமாண்டி', மற்றும் மதயானைக்கூட்டம், மயிலு, தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் போன்ற படங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களிலும் கணீரென தனது வெங்கல குரலால் பாடல்கள் பாடி அனைவரையும் கவர்ந்தவர் திருவுடையான்.
48 வயதான திருவுடையான் இன்று அதிகாலை மதுரைக்கு சென்று கொண்டிருந்தபோது அவர் சென்ற கார் திடீரென விபத்துகுள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது சகோதரர் தண்டபாணி மற்றும் கார் டிரைவர் ஆகியோர் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.