கேரளாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வழுக்கி விழுந்ததில் படுகாயம் அடைந்த விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளைய தளபதி விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் கேரள மாநிலம் குமரகோமில் இருக்கும் ஹோட்டல் ஒன்றுக்கு சென்று தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் ஹோட்டலில் வழுக்கி விழுந்தார்.இதில் அவருக்கு தலை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.