'பிரேக் டான்ஸ்' ஆடும் வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய மகாத்மா காந்தி..!!
யூடியுப்பில் செப்டம்பர் 3-ம் தேதி வெளியான இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவில், மகாத்மா காந்தி பிரேக் டான்ஸ் ஆடுவது போன்றும், அவரின் பின்னணியில் நாடாளுமன்ற கட்டிடம் தீப்பற்றி எரிவது போன்றும் அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று ஊழல், லஞ்சம் என குட்டிச் சுவராகிவிட்டதாகவும், வாழ்க்கையில் பணம் மட்டுமே முக்கியம் என்று காந்தி பாடுவது போன்று அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் மாறி விட்டதாகவும், சத்யகிரகம் தனக்கு எதையும் பெற்றுத்தரவில்லை எனவும், அதனால் ஏமாற்றுத்தனம் என்ற கொடியை பிடிக்கும் நிலைக்கு தான் தள்ளப்பட்டேன் எனவும் காந்தி பாடுவதாக வீடியோவின் பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.