கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நடித்து வரும் படம் ஒன்றில் ஒரு பாடலில் நடனமாட நடிகை ஸ்ருதி ஹாசன் ரூ. 2 கோடி கேட்டதாக தகவல்கள் வருகின்றன.
நடிகர் கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் படு கவர்ச்சியாக நடிப்பவர். விமர்சனங்கள் காரணமாக தற்போது கவர்ச்சியை குறைத்துள்ள அவர் தெலுங்கு படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் வருகிறார்.
இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நகுல் நடித்து வரும் படத்தில் குத்து பாடல் ஒன்றில் நடனமாட ஸ்ருதிக்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அவர் அதற்கு 2 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கமாக ஒரு கோடி தான் கேட்கும் ஸ்ருதி இதற்கு மட்டும் 2 கோடி கேட்டதற்கு, அந்த நடிகர் அதிகம் பிரபலம் இல்லாதவர் என்பதால் தான் எனவும் தகவல்கள் வருகின்றன. தற்போது ஸ்ருதிக்கு வந்த அந்த வாய்ப்பு தமன்னாவிற்கு கிடைத்துள்ளதாம்.