விஜய் 60 படத்திற்கு பைரவா என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் போஸ்ட்டரை இன்று நள்ளிரவுக்கு மேல் தான் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் நேற்று மதியமே யாரோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டார்கள்.
அதை பார்த்து அதிர்ச்சியான படக்குழு அதிகாரபூர்வ போஸ்டரை உடனடியாக வெளியிட்டுவிட்டனர்.
அவ்வளவு ரகசியமாக வைத்திருந்த போஸ்ட்டரை யார் லீக் செய்திருப்பார்கள் என விசாரித்ததில் போஸ்டர் அச்சிடப்படும் இடத்தில் இருக்கும் யாரோ தான் அதை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.