நா.முத்துக்குமார் பேனா இனி எழுதவே எழுதாது. ஆனால், அவர் எழுதிய எழுத்துக்கள் இன்னும் எத்தனை ஆண்டு கடந்தாலும் நம்மை விட்டு நீங்கவே நீங்காது.
இவரின் இழப்பை இனி யாராலும் ஈடுக்கட்ட முடியாதது தான், குறிப்பால பல இசையமைப்பாளர்களுக்கு ஒரு கை உடைந்தது போல தான்.
தமிழ் சினிமாவில்
ராஜா, ரகுமான், யுவன், ஹாரிஸ், ஜோஸ்வா ஸ்ரீதர், வித்யாசாகர், தேவி ஸ்ரீ பிரசாத், ஜி.வி, அனிருத் வரை எல்லோருக்கும் பாடல்களை எழுதியவர்
நா.முத்துக்குமார்.
பாடல்கள் என்றாலே கவிதை நயமாக இருக்க, முதன் முதலாக எளிய மக்களுக்கும் புரியும் படி எளிதில் முனுமுனுக்கும்படி பாடல்களை எழுதியவர் முத்துக்குமார் தான்.
ஒரு கல் ஒரு கண்ணாடி, பறவையே எங்கு இருக்கிறாய், தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும், ஆனந்த யாழை, சுட்டு விழிச்சுடடே, அழகே அழகே என காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை கொடுத்து பல இசையமைப்பாளர்களையும், ரசிகர்களையும் ஏமாற்றி முத்துக்குமார் சென்றுவிட்டார்.