தமிழ் சினிமாவில் வசூல் கிங் என்றால் அது அஜித் தான்.
அஜித் நடிப்பில் கடைசியாக வந்த 3 படங்களும் செம்ம ஹிட், இவர் தற்போது மூன்றாவது முறையாகவும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
பொதுவாக இவரிடம் கால்ஷீட் பெறுவதே கடினம். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் இவரிடம் கால்ஷிட் வாங்க காத்திருக்கின்றாராம்.
அவர் வேறு யாரும் இல்லை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தான். அவர் விரைவில் ஒரு பிரமாண்ட படத்தை தயாரிக்கவுள்ளாராம், இப்படத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணியுள்ளார்.
இதற்காக அஜித்திற்கு நாள் ஒன்றிற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருகிறேன், அவர் கால்ஷிட் கொடுத்தால் போதும் என காத்திருக்கின்றாராம்.