விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி ஷோ ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’. இதன் முதல் சீசனை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கியிருந்தார்.
அதன்பிறகு அடுத்த ஆண்டே இதன் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டு அதை பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் மூன்று ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு தற்போது இதன் மூன்றாவது சீசனை அரவிந்த்சாமி தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் அவ்வப்போது சில பிரபலங்கள் கலந்துகொண்டு விளையாடுவார்கள். அந்தவரிசையில் தற்போது தெறி புகழ் நைனிகா தனது அம்மா மீனாவுடன் இதில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.