நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரயானின் திருமணத்திற்கு அக்கா வரலட்சுமி வரவில்லை.
நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ஹார்டிக்கும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் நேற்று மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா வந்திருந்தார். திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் தங்கை ரயானின் திருமணத்திற்கு அக்கா வரலட்சுமி சரத்குமார் வரவில்லை. வரலட்சுமிக்கும், விஷாலுக்கும் காதல் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக சரத்குமாருக்கும், விஷாலுக்கும் இடையே மோதலாக உள்ளது.
இந்த சூழலில் வரலட்சுமி விஷாலின் பக்கம் சாய்ந்துள்ளார். விஷால் வராத திருமணத்திற்கு வரலட்சுமியும் வரவில்லை.