சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி; ஆனந்த்சங்கர் இயக்கிய 'இருமுகன்' திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஷிபுதமீன்ஸ் அறிவிப்பு செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
இந்நிலையில் விக்ரம் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் விரைவில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், அவ்வாறு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் இளையதளபதி விஜய்தான் தனது ஹீரோ என்றும், ஒருவேளை அவர் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ஜெயம் ரவி தனது அடுத்த சாய்ஸ் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விக்ரம், சென்னை வெள்ளம் குறித்த வீடியோ ஒன்றை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பில் தேசியவிருது பெற்ற விரைவில் இயக்குனராகி இயக்கத்திலும் தேசியவிருது வாங்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்