கவிஞர் நா.முத்துக்குமாரின் இழப்பு பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவிற்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர்.
இதுமட்டுமின்றி பல விருதுகளையும் வாங்கியவர். இவர் படங்களுக்கு பல பாடல்களை எழுதியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால், இவர் அஜித் நடிப்பில், விஜய் இயக்கத்தில் வெளிவந்த கிரீடம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகமானார், ஆம், கிரீடம் படத்தில் பல வசனங்கள் நா.முத்துக்குமாருக்கு சொந்தமானவை. இதன் பிறகு இவர் வேறு எந்த படத்திற்கும் வசனம் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெகதீஸ்வரன் என்ற ஒரு படத்திற்கு இதை தொடர்ந்து இவர் வசனம் எழுதியதாக கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.