நயன்தாராவைப்பற்றி தற்போது பேசாத கோலிவுட் நடிகர்களே கிடையாது. சின்ன நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை நயன்தாரா குறித்து விசாரிக்கிறார்களாம். அந்த அளவுக்கு அவருக்கு மார்க்கெட் உள்ளது.
குறிப்பாக இளம் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட ஆர்வம் காட்டுகிறார்களாம்.
பிரபு தேவாவுடன் பிரிவு ஏற்பட்ட பின்னர் அவர் ரொம்ப அப்செட்டாகி இருந்தார். அதனால் யாருடனும் பேசமாட்டார். சூட்டிங் முடித்தால் கேரவனுக்குள் புகுந்துகொள்வார். யார் எதை கேட்டாலும் கடிப்பார் என்றெல்லாம் இருந்த நிலை இப்போது மாறிவிட்டது.
இப்போது சூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பாக இருக்கிறார். கீழ்மட்ட பணியாளர்களைக்கூட அக்கரையாக விசாரிக்கிறார்.
எல்லோருடனும் அன்பாக பழகுகிறார். காரணம் பல காதல் பிரிவுகள் அவரை மெச்சூரிட்டி அடைய வைத்துள்ளது.
மேலும் நல்ல மார்க்கெட்டும் இருப்பதால் சம்பாதித்துக்கொண்டு காதலனுடன் செட்டிலாக வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதால் உற்சாகம் கரை புரள்கிறது. முகத்திலும் கல்யாண களை வந்துவிட்டது என்கிறார்கள் கோலிவுட்டில். நல்ல மனசு காரர்கள்தான் அடிக்கடி காதல் வலையில் வீழ்வார்கள்.!